வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரவாகிணிப்பேட் பகுதியில் இயங்கி வரும் சுமைதாங்கி டிரஸ்ட் சார்பில் பொதுமக்களுக்கு ஆட்டுக்கால் சூப் மற்றும் கோழிக்கால் சூப் வழங்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரவாகிணிப்பேட் பகுதியில் இயங்கி வரும் சுமைதாங்கி டிரஸ்ட் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உத்தரவாகிணி பேட், பெரிய பேட், கரையான் பேட், அம்பேத்கர் நகர், புதுப்பேட், எஸ்.எஸ்.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை மற்றும் பனியின் காரணமாக பொதுமக்களின் முழு உடல் ஆரோக்கியத்திற்காகவும் ஆட்டுக்கால் சூப் மற்றும் கோழிக் கால் சூப் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சுமைதாங்கி டிரஸ்ட் நிறுவனர் மாஸ்கோ செய்திருந்தார்.
What's Your Reaction?






