வில்லியனூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அன்புள்ள ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அண்ணா சிலை அருகே, வில்லியனூர் அன்புள்ள ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானமும், 100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில், ஸ்கேல், பிஸ்கட் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது வில்லியனூர் தொகுதி செயலாளர் ரஜினி முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மன்றத் தலைவர் ரவிச்சந்திரன், இணைச்செயலாளர் அருள், மங்களம் தொகுதி செயலாளர் நாகராஜா, ராகவன், முருகன் ஆசாரி, ஆறுமுகம், இரணியன், பாலு, ரவி, மூர்த்தி, வெங்கடேஸ்வரன், கோபி, பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
What's Your Reaction?






