முதலமைச்சர் ரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துவதாகவும், முதலமைச்சர், அமைச்சர்கள் கோழைகளாக உள்ளனர்
முதலமைச்சர் ரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துவதாகவும், முதலமைச்சர், அமைச்சர்கள் கோழைகளாக உள்ளனர். கவர்னருக்கு மண்டியிட்டு சேவகம் செய்கின்றனர் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுச்சேரியில் (RNI) புதுச்சேரி மக்களை பற்றி கவலைப்படாத ஊழல் மலிந்த, கமிஷன் ஆட்சி நடக்கிறது என்றும் விமர்சித்தார்.
புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் பணியை வேகமாக அரசு செய்து வருவதாகவும், இத்திட்டத்தால் இலவச மின்சாரம் வழங்குவது நிறுத்தப்படும் என்று கூறிய அவர், எந்த மாநிலத்திலும் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றும், புதுச்சேரியில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த துடிக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமி பலவீன மடைந்துவிட்டாரா? ஏன் மத்திய அரசை அவர் எதிர்க்கவில்லை? என்று கேள்வி எழுப்பிய அவர், புதுச்சேரி மக்களை என்ஆர்.காங்கிரஸ், பாஜக வஞ்சிக்கிறது என்றும், மக்களை ஏமாற்றி ஓட்டுகளை வாங்கிவிட்டு துரோக செயல்களை அரசு செய்து வருவதாகவும், பிரீபெய்டு மீட்டர் பொருத்தும் திட்டத்தை காங்கிரஸ் கண்டிக்கிறது என்றும், எனவே வரும் 26, 27ம் தேதிகளில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளதாகவும், இந்த திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கும் கூட்டங்களில் தலைமை செயலர், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை, கோப்புகள் திருப்பி அனுப்பப்படுகிறது என வெளிப்படையாக புலம்ப ஆரம்பித்துள்ளார் என்றும், கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் துணைநிலை ஆளுநர் தலையீடு இருந்தது என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முதலமைச்சர் ரங்கசாமி அடிமை ஆட்சி நடத்துகிறார். முதலமைச்சர், அமைச்சர்கள் கோழைகளாக உள்ளனர். கவர்னருக்கு மண்டியிட்டு சேவகம் செய்கின்றனர் என கடுமையாக விமர்சித்தார்.
ஆட்சியாளர்களின் ஊழல் தற்போது ஆதாரப்பூர்வமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை, லேப்டாப், சைக்கிள் ஆகியவை மூலமாக ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 9 ஆயிரம் சைக்கிள்களுக்கு பதிலாக 12 ஆயிரம் சைக்கிள் வாங்கி 30 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளனர் என்றும், அந்த சைக்கிள்களும் தரமற்ற சைக்கிள்களாக உள்ளதாக கூறினார். இந்த ஆட்சி கமிஷன் ஆட்சி என்றும், 60 ஆயிரம் லேப்டாப் வாங்க குளோபல் டெண்டர் விடவில்லை. லேப்டாப் வாங்குவதில் 10 சதவீதம் கமிஷன் பேசியுள்ளனர். ஆனால் தலைமை செயலாளர் குளோபல் டெண்டர் வேண்டும் என தெரிவித்தார். கூட்டு கொள்ளைக்கு ஒத்துழைக்காததால் தலைமை செயலரை முதலமைச்சர் ரங்கசாமி குறைகூறுகிறார் என்றும், புதுவை மக்களை பற்றி கவலைப்படாத ஊழல் மலிந்த, கமிஷன் ஆட்சி நடக்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றம், தமிழகத்தில் பேச முடியாத எல்.முருகன் புதுவையில் வந்து பேசிவிட்டு செல்கிறார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Follow the RNI News channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6XB2Xp81Z
What's Your Reaction?