புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் அரிமளம் எஸ்.பத்மநாபன் இசை அறிஞருக்கான விருதுக்கு சென்னை மியூசிக் அகாடமி தேர்வு செய்துள்ளது.
புதுச்சேரி...புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் அரிமளம் எஸ்.பத்மநாபன் இசை அறிஞருக்கான விருதுக்கு சென்னை மியூசிக் அகாடமி தேர்வு செய்துள்ளது.தனது 50 ஆண்டு இசை பயணத்திற்கும் 25 ஆண்டு கால தமிழ் இசை,இயல் இசை,நாட்டுப்புற இசை ஆகியவற்றிற்கான முத்திரை என டாக்டர் அரிமளம் எஸ்.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
சென்னை மியூசிக் அகாடமியின் நிர்வாக குழு 2023 ஆம் ஆண்டுக்கான விருது பெரும் கலைஞர்களை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது. இதில் இசைத்துறையில் நீண்ட ஆராய்ச்சியை செய்து வரும் புதுச்சேரியில் வசிக்கும் டாக்டர் அரிமளம் எஸ்.பத்மநாபன் இசை அறிஞருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரம்பரிய நாடகங்களில் கையாளப்படும் இசைக் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இவருக்கு விருது வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் சென்னை மியூசிக் அகாடமியின் 97வது ஆண்டு விழாவில் வழங்கப்பட உள்ளது.
மிக பெரிய அங்கீகாரத்தை சென்னை மியூசிக் அகாடமி அளித்து உலக அளவில் பெருமையை தேடி தந்துள்ளதாக மகிழ்வுடன் கூறும் அரிமளம் பத்மநாபன்,தனது 50 ஆண்டு இசை பயணத்திற்கும் 25 ஆண்டு கால தமிழ் இசை,இயல் இசை,நாட்டுப்புற இசை ஆகியவற்றிற்கான முத்திரை என தெரிவித்தார்.
இயல் தமிழோடு பார்த்தால் இசை தமிழும் நாடக தமிழும் நோஞ்சானாக இருக்கிறது.அந்த அளவிற்கு ஆய்வும் நூல்களும் வரவில்லை.இதனால் அத்துறையில் தேடி தேடி ஆய்வு செய்து நூல்களாய் வெளியிட்டுள்ளேன்.வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் ஆய்விற்காக இங்கு வருகிறார்கள்.அவர்களிடம் பணம் வாங்குவதில்லை.அனைருக்கும் சாப்பாடு போட்டு அய்யப்பாடுகளை நிவர்த்தி செய்கிறேன் என்கிறார்.
இவருக்கு ஏற்கனவே புதுச்சேரி அரசு தமிழ்மாமணி,கலைமாமணி விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.தமிழின் முதல் இசைத்தமிழ் கலைக்சொல் அகராதியின் தொகுப்பு ஆசிரியர்.சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் ஆய்வறிஞர் என பல பரிமானங்களை பெற்றுள்ள அரிமளம் பத்மநாபன்,புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியை சேர்ந்தவர்.45 ஆண்டுகளாய் புதுச்சேரியில் இசை பயணத்தையும் முத்தமிழிலுமான ஆராய்ச்சி பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.
What's Your Reaction?