புதுச்சேரியில் போக்சோ பிரிவு வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) T. ராஜா அவர்கள் கலந்துகொண்டு போக்சோ விரைவு நீதிமன்றத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
முதலமைச்சர் ந. ரங்கசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் .S.வைத்தியநாதன், .G.K.இளந்திரையன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
சட்டப்பேரவைத் தலைவர் R.செல்வம், பொதுப்பணித்துறை மற்றும் சட்ட அமைச்சர் க.லட்சுமிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர் G.நேரு (எ) குப்புசாமி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, இ.ஆ.ப., புதுச்சேரி நீதிமன்ற தலைமை நீதிபதி J.செல்வநாதன், சட்டச் செயலர் G. செந்தில்குமார் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






