புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும், பாஜகவை விட்டு வெளியேற முயற்சித்தால் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி நிலமை வரும் என்கிறார்கள்
புதுச்சேரிக்கு (RNI) புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும், பாஜகவை விட்டு வெளியேற முயற்சித்தால் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி நிலமை வரும் என்கிறார்கள். ஒரு போதும் அந்த நிலை வராது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-ம் ஆண்டுக்கான காலண்டரை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும், புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியோடு கழித்துசெல்ல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், கொரோனா பரவல் குறித்து தீவிரமாக கவனித்து வருவதாகவும், மத்திய அரசிடம் இருந்து கட்டுப்பாடுகள் குறித்து அறிவுறுத்தல்கள் இல்லை. தேவை ஏற்படும் போது சொல்வோம் என்றார். மேலும் அரசு அதிகாரிகள் விரைவாக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அப்போதுதான் வளர்ச்சி இருக்கும். அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
புதுச்சேரியில் மின்கட்டணத்தை இணை மின்சார ஒழங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கின்றனர். மத்திய அரசை நாடுவதை பற்றி கேட்கிறீர்கள். தேவை ஏற்படும் போது இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பாஜகவிலிருந்து வெளியே வர முயற்சித்தால் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி நிலைதான் ஏற்படும் என்று எம்பி வைத்திலிங்கம் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, எந்த நிலைமையிலும் அது போன்ற நிலை எங்களுக்கு ஏற்படாது. அந்நிலை எங்களுக்கு எப்போதும் இல்லை என உறுதியாக கூறினார். மேலும் நிர்வாகத்தில் வேகமாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையாக அதிகாரிகள் செயல்பட கூறுகிறோம். அதற்கு மாநில அந்தஸ்து ஒன்று தான் வழி. மாநில அந்தஸ்தை பெற ஒவ்வொறு முறையும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறேன். எங்கள் அரசு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. கூட்டணி அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடை திறப்பது உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் தீர்வு மாநில அந்தஸ்து தான். புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார்.
Follow the RNI News channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaBPp7rK5cD6XB2Xp81Z
What's Your Reaction?