புதுச்சேரி பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் என்ற சத்ரிய குருகுலம் சார்பில் சர்வதேச கரலாக் கட்டை சதினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வு புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்றது.
புதுச்சேரி பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம், மற்றும் சத்திரிய சேனா சேவகம், சார்பில் சர்வதேச கரலாக் கட்டை தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வு புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே நடைபெற்றது.
இந்த உலக சாதன நிகழ்வை புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார்.
ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மன், மற்றும் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், உத்தர பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் 1000- கற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இதில் ஒன்பது வகையான மெய்ப்பாடங்களும் மற்றும் ஐந்து வகையான கரலாக்கட்டை சுற்றும் நிகழ்வு நடைபெற்றது
இதில் 1000- பேர் கலந்து கொண்டு அரை மணி நேரத்தில் 1342 சுற்றுகள் சுற்றி உலக சாதனையை நிகழ்த்தினர்.
இந்த நிகழ்வை பாராட்டி புதுச்சேரி பூர்னாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுல நிறுவனர் ஜோதி செந்தில் கண்ணன் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு அசிஸ்டெண்ட் வேர்ல்ட் ரெக்கார்டு சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.
What's Your Reaction?