புதுச்சேரி அரசு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்ற இருவரை தட்டிக்கேட்ட ஊழியரை கழுத்தை நெரித்து தாக்கும் சிசிடி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Apr 1, 2023 - 21:52
Apr 1, 2023 - 21:52
 0  9.7k

புதுச்சேரி...புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சுல்தான்பேட்டையில்  புதுச்சேரி அரசுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு இருவர் பைக்கில் வந்து பெட்ரோல் போட்டு உள்ளனர். ஆனால் அதற்கான பணத்தை தரவில்லை. இதை அங்கு பணியாற்ற ஊழியர் சதீஷ் தட்டி கேட்டதுடன் அவர்களது வண்டியின் சாவியை எடுத்துக்கொண்டு மேலாளிடம் புகார் செய்ய சென்றார்.
 பின்னால் வந்த அந்த இருவரும் அவரை வழிமறித்து கடுமையாக தாக்குகிறார்கள். மேலும் கழுத்தை நெரித்து அவருக்கு கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கட்சியில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சதீஷை தாக்கிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow