ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்கள் 200 க்கும் மேற்பட்டோர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தின கூலி ஊழியர்களாக பல ஆண்டுகளாக பணியாற்று வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பின்படி ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக அலுவலகம் முன்பு தினக்கூலி ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜிப்மர் நிர்வாகம் தங்களை பணி நிரந்தரம் செய்யாமல் அலைக்கழிப்பதாகவும் நீதிமன்ற தீர்ப்புக்கு தடையானை பெற்று ஊழியர்களின் வாழ்வாதாரத்தை குறைக்கும் வகையில் செயல்படுவதாகவும் கூறி தினக்கூலி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?






