சட்டமன்றத்தை கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுச்சேரி...திருபுவனையில் இயங்கி வரும் கூட்டுறவு நூற்பாலை கச்சாப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக கடந்த 2022 ஜூன் 8-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது தற்பொழுது பஞ்சு விலை குறைந்த நிலையில் ஆலையை இயக்க நிர்வாகம் முன் வரவில்லை, ஆலையை மூடி பத்து மாதங்கள் ஆகிறது. அதில் பணிபுரிந்து வரும் 350 தொழிலாளர்கள் வருவாய் ஏதும் என்று தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஆலையை இயக்க ஏற்று நடத்த வேண்டும் இல்லை என்றால் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஆலையின் உயர் அதிகாரிகள் செய்துள்ள மிகப்பெரிய மோசடியை விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் 50க்கும் மேற்பட்ட கூட்டுறவு நூற்பாலையின் ஊழியர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சட்டமன்ற கூட்டம் தற்போது நடைபெற்று வருவதால் மதியம் 2 மணிக்கு பிறகு தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்க அனுப்புவதாக உறுதியளித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
What's Your Reaction?






