கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பம் முருகர் கோவில் பங்குனி திருவிழா நாளை 3ம் தேதி நடக்கிறது...
புதுச்சேரி : புதுவை தெற்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் கூறியதாவது:
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பம் முருகர் கோவில் பங்குனி திருவிழா நாளை 3ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் செடல் போட்டு கொண்டு புதுச்சேரி கடலூர் சாலை கிருமாம்பாக்கம் வழியாக செல்வார்கள். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் நலன் கருதி அன்று காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை புதுவை- கடலூர் சாலையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
அதாவது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் பஸ்கள், லாரி கனரக வாகனங்கள் அனைத்தும் கன்னியக்கோவில் சந்திப்பில் இருந்து இடது பக்கம் திரும்பி பாகூர், சேலியமேடு, கரிக்கலாம் பாக்கம், அபிஷேகபாக்கம், தவளக்குப்பம் வழியாக புதுச்சேரியை அடைய வேண்டும்.
புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும்,பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம் கரிக்கலாம்பாக்கம் சேலியமேடு, பாகூர் கன்னிய கோவில் வழியாக கடலூர் செல்ல வேண்டும்.
பைக் கார் போன்ற இலகுரக வாகனங்கள் வழக்கம் செல்லலாம்.
What's Your Reaction?






