எஸ் டி பி ஐ கட்சி சார்பாக சுல்தான் பேட்டையில் பாபர் மஸ்ஜித் தாக்கப்பட்ட தினம் பாசிச எதிர்ப்பு தினம் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ் டி பி ஐ கட்சி சார்பாக சுல்தான் பேட்டையில் பாபர் மஸ்ஜித் தாக்கப்பட்ட தினம் பாசிச எதிர்ப்பு தினம் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முகமது ஃபாருக் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகமது கவுஸ் வரவேற்பு வழங்கினார், ஹனிபா , அப்துல்லா, ரபீக் மன்சூர் ,முகமது காசிம் ,ஜாகிர் உசேன், ஷாஜகான், சரத் பாஷா, இக்பால் பாஷா ,அப்துல் ஜபார் ,இலியாஸ், சாகுல் ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் பரகத்துல்லா, புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் ஏ வி எஸ் சுப்பிரமணியன் , எஸ் டி டி யு தொழிற்சங்க தேசியr பொதுச் செயலாளர் முகமது பாரூக், திராவிட கழக மாநில தலைவர், தமிழர்களும் மாநில செயலாளர் அழகர், பெரியார் சிந்தனையாளர் ஒருங்கிணைப்பாளர் தீனா, மக்கள் அதிகாரம் தலைமை குழு உறுப்பினர் சாந்தகுமார், சமூக ஆர்வலர் பாஸ்டர் ரகு சாலமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
இறுதியாக அமீன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்டிபி கட்சி நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






