அதிமுக பொதுக்குழு தீர்ப்பை வரவேற்று புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்
புதுச்சேரி : அதிமுக பொதுக்குழு தீர்ப்பை வரவேற்று புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அதிமுக பொது குழு குறித்தான தீர்ப்பு இன்று காலை வழங்கப்படும் என அறிவித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பை வரவேற்கும் வகையில் புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில துணை செயலாளருமான வையாபுரி மணிகண்டன் தலைமையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை சந்திப்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் இதில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என கோஷமிட்டனர்.
பேட்டி:வையாபுரி மணிகண்டன்,அதிமுக மாநில துணை செயலாளர்.
What's Your Reaction?






