29 நாளே ஆன பெண் சிசு மணலில் தலையை அழுத்தி கொலை
மர்ம நபர் கடத்தி கொன்றதாக நாடகமாடிய தாய் கைது, குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கணவர் திட்டியதால் மனம் உடைந்த மனைவி குழந்தையை உயிரோட புதைத்ததாக விசாரணையில் ஒப்புதல்
புதுச்சேரி பாகூர் கிருமாம்பாக்கத்தை அடுத்த மூர்த்திகுப்பம் புதுக்குப்பம் கடற்கரையில் இன்று காலை ஒரு குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது.அப்போது வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதனிடையே புதுக்குப்பம் குளத்துக்கு அருகே குடும்பத்துடன் வசிக்கும் நாடோடி பழங்குடி வகுப்பை சேர்ந்த சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த குமரேசன்(32), அவரின் 2வது மனைவி சங்கீதா(24) ஆகியோர் ஊர் ஊராய் சென்று குப்பை பொறுக்கும் வேலையை செய்து வருகின்றனர்.இவர்கள்
தங்கள் குழந்தையை காணவில்லை என தேடினர்.
தகவலறிந்து வந்து சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது மணலில் புதைத்து இறந்து கிடந்த குழந்தை தங்களுடையது என தெரிந்து கதறி அழுதனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குமரேசனுக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே மற்றொருவரின் மனைவியான சங்கீதாவை 2வதாக திருமணம் செய்துள்ளார். கடந்த சில மாதம் முன்பு கர்ப்பிணியான சங்கீதா, தனது தம்பி குடும்பத்துடன் கிருமாம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார்.
சமுதாய நலக்கூடம் அருகே சில நாட்கள் வசித்துள்ளனர். பின்னர் குளக்கரைக்கு அருகில் வந்து வசித்துள்ளனர். கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்றைய தினம் குழந்தை அழுததால் குமரேசன் குழந்தையை கவனித்துக்கொண்டிருந்தார். குழந்தையோடு, தானும் தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் மர்மநபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும், அவர் தனது குழந்தையை கொலை செய்திருக்கலாம் என சங்கீதா தெரிவித்துள்ளார்.அப்பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லாத நிலையில் போலீசாருக்கு குமரேசன், சங்கீதா தம்பதியர் மீது சந்தேகம் எழுந்தது.
இவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் குழந்தையை சங்கீதா அதிகாலை தூக்கி செல்வது போன்ற வீடியோ Cctv ல் இருப்பதாக போலீசார் பொய் சொல்ல இதில் பயந்து போன சங்கீதா உண்மையை சொன்னார்.
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறினால் விபரீத முடிவு எடுத்ததாக கூறினார்.
குழந்தை தனக்கு பிறக்கவில்லை என கணவர் திட்டியதால் மனம் உடைந்த சங்கீதா குழந்தையை உயிரோட புதைத்ததாகவும் மேலோட்டமாக புதைத்ததால் நாய் வெளியே இழுத்து போட்டுள்ளதாக விசாரணையில் தெரிவித்தார்.இதனையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்...
What's Your Reaction?






