வில்லியனூர் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதம் நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு எல்லாம் திருக்கோாமேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
புதுவை மாநிலம், வில்லியனூர் அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதம் நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு எல்லாம் வல்ல ஸ்ரீ திருக்கோாமேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழாவினை ஆலய பிரதான அர்ச்சகர் சிவஸ்ரீ பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் மற்றும் சிவா குருக்கள் செய்தனர். மேலும் சிறப்பு விருந்தினராக ஆலய சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் சங்கர் வித்யாலயா தாளாளர் சத்யா மற்றும் சுகந்தி, சரஸ்வதி, மற்றும் பூர்விகா மேனேஜர் சீனிவாசன், தேவி, அருணா மற்றும் சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
What's Your Reaction?






