புதுச்சேரி மாநில சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் கிராமங்கள் தோறும் நடைபெற்று வரும் ஹரிவாரசனம் நூற்றாண்டு விழாவின் 9 வது ஐயப்ப பூஜை வில்லியனுரில் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் நடைபெற்று வரும் ஹரிவாரசனம் நூற்றாண்டு விழா ஐயப்ப பூஜை மேற்குவீதி முத்தாலவாழியம்மன் ஆலயத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை ஐயப்ப மூலவருக்கு பல வித திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை 7.00 மணியளவில் ஐயப்ப உற்சவருக்கு அம்பலம் அமைக்கப்பட்டு பக்தி பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக மகா தீபாராதனைக்குப் பின் ஹரிவராசனம் பாடல் பாடப்பட்டது. பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. இப்பூஜையில் ஐயப்ப பக்தர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை புதுச்சேரி மாநில சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் மற்றும் ஸ்ரீ ,சற்குருநாதன் ஐயப்ப சேவா சங்கம் இணைந்து சிறப்பாக செய்து இருந்தனர்.
What's Your Reaction?