புதுச்சேரி மாநில சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் கிராமங்கள் தோறும் நடைபெற்று வரும் ஹரிவாரசனம் நூற்றாண்டு விழாவின் 8 வது ஐயப்ப பூஜை கரியமாணிக்கத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி மாநில சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் சார்பில் கிராமங்கள் தோறும் நடைபெற்று வரும் ஹரிவாரசனம் நூற்றாண்டு விழா 8 வது ஐயப்ப பூஜை கரியமாணிக்கம் எல்லகல்லு அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனின் அம்பலத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து ஐயப்ப பக்தர்களின் பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தலைவர் வெங்கடேசன் அவர்கள் ஹரிவராசனம் பாடலின் பெருமையையும், வரலாற்று சிறப்பை பற்றியும் விரிவாக பேசினார். சபரிமலை மற்றும் இருமுடியில் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என சமாஜத்தின் பொதுசெயலாளர் தட்சிணாமூர்த்தி பூஜையில் கலந்து ஐயப்ப பக்தர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
நிறைவாக தீபாராதனை க்குப்பின் வாண வேடிக்கைகளுடன் ஹரிவாரசனம் பாடல் பாடப்பட்டு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
இப்பூஜையில் சமாஜத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஐயப்ப யோக உறுப்பினர்கள் ஐயப்ப பக்தர்கள், தாய்மார்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப யோகத்தை சேர்ந்த குமரன், மணவாளன், சிவபூஷணம், கலியமூர்த்தி, பக்கிரி ஆகியோர் வெகு சிறப்பாக செய்து இருந்தனர்.
What's Your Reaction?






