புதுச்சேரியில் உள்ள மூன்று பஞ்சு ஆலைகளை மூட அரசு நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து தொழிற்சங்கங்கள் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதுச்சேரியில் இயங்கி வரும் சுதேசி மில் பாரதி மில் aft பஞ்சாலை உள்ளிட்ட மூன்று பஞ்சாலைகளை திறந்து நடத்த வாய்ப்பில்லை என முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார் இதற்கு பஞ்சாலை ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர் இந்நிலையில் புதுச்சேரி சிஐடி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் aituc மாநில தலைவர் அபிஷேகம் தலைமையில் சட்டசபை அருகே நடைபெற்றது இதில் aituc நிர்வாகிகள் மூர்த்தி சேர்த்து செல்வோம் intuc தொழிற்சங்க நிர்வாகிகள் பூபதி ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார் இதில் புதுச்சேரி அரசு பஞ்சாலைகள் மூலம் கிடைத்து வரும் வேலை வாய்ப்புகளை நாசமாக்காதே எனவும் பஞ்சாலைகளை பஞ்சாலைகளாகவே நடத்த வேண்டும் பஞ்சாலைகளின் இடங்களை வேறு திட்டங்களுக்கு மாற்றக்கூடாது aft சுதேசி பாரதி ஆகிய மூன்று மில்லி களையும் இணைத்து ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் மேலும் மத்திய அரசிடம் உதவி பெற்று மீண்டும் பஞ்சாலைகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
What's Your Reaction?






