பாண்டிச்சேரி ரூரல் பிரதர்ஸ் மற்றும் விளையாட்டு மன்றம் இணைந்து நடத்திய மாநில அளவிலான 27 வது வலைப்பந்து போட்டி பாகூரில் உள்ள விளையாட்டு மன்ற திடலில் நடைபெற்றது.
பாண்டிச்சேரி ரூரல் பிரதர்ஸ் மற்றும் விளையாட்டு மன்றம் இணைந்து நடத்திய மாநில அளவிலான 27 வது வலைப்பந்து போட்டி பாகூரில் உள்ள விளையாட்டு மன்ற திடலில் நடைபெற்றது. சப் ஜூனியர் ஜூனியர் சீனியர் ஆகிய பிரிவுகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாண்டிச்சேரி அமைச்சூர் வலைப்பந்து சங்க தலைவர் ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில, அகில இந்திய நடுவர் கமலக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் கலந்து கொண்டு சப் ஜூனியர் ஜூனியர் சீனியர். ஒற்றையர் இரட்டையர் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சிறுவர் சிறுமியர் மற்றும் ஆடவர் பெண்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஹரி என்கிற துரைசாமி, சங்க இணைச் செயலாளர் அருளரசன், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் முரளி என்கிற திருவருட்செல்வன். அன்னை தெரசா செவிலியர் கல்லூரி நூலகர் சுப்பிரமணியன், அகில இந்திய நடுவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்தி நினைப் பரிசுகளை வழங்கினர், நிறைவாக பாண்டிச்சேரி அமைச்சூர் வலைப்பந்து சங்கச் செயலாளர் தினேஷ் குமார், நன்றியுரை ஆற்றினார். இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகளும் விளையாட்டு வீரர்களும் செய்திருந்தனர்.
What's Your Reaction?