சுற்றுலா செல்வது போல் நடித்து கஞ்சா கடத்தி வந்து விற்ற  கல்லுாரி மாணவர்கள் மூவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Apr 18, 2023 - 14:45
Apr 18, 2023 - 15:42
 0  3k

புதுச்சேரி...கேரள எல்லையில் உள்ளது புதுச்சேரியின் மாகி பகுதி.இங்கு  கஞ்சா கடத்தல்களை கட்டுப்படுத்த தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பந்தக்கல் சாலை வழியாக வந்த  காரை சோதனையிட்டதில்  580 கிராம் கஞ்சா சிறிய பொட்டலங்களாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாகி காவல் கண்காணிப்பாளர், ராஜசங்கர்வல்லட், ஆய்வாளர் சேகர்,  தலைமையிலான போலீசாரின் விசாரணையில், காரில் இருந்த கல்லுாரி மாணவர்களான பந்தக்கல் பிரியதர்ஷினி,முகமது சையத்பரூக், முகமது பியாஸ்,  தளச்சேரி பகுதியைச் சேர்ந்த அலோக், பிளம்பர் வேலை செய்யும் தளச்சேரி ஷரன் என்பது தெரியவந்தது. நால்வரும் அடிக்கடி ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று அங்கு மலை பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் கஞ்சாவை வாங்கி வந்து, மாகியில் சிறிய பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்து கார்,செல்போன்,புதுப்புது உடைகள் என சொகுசாக இருந்தது தெரியவந்தது. கைப்பற்றிய கஞ்சா மதிப்பு ரூ. 30 ஆயிரம். 
கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்து கார், 2 மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நால்வரும் மாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow