அருட்பிரகாச வள்ளலார் அருள்வழி தொண்டர்கள் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
வில்லியனூரில் ஒவ்வொரு மாத பூசத்தின் போதும் அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று கார்த்திகை மாத பூச நட்சத்திரத்தினை முன்னிட்டு வில்லியனூர் ராம்பரதேசி சித்தர் கோவில் அருகில் அருட்பிரகாச வள்ளலார் அருள்வழி தொண்டர்கள் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் நண்பகல் 12.00மணி அளவில் சன்மார்க்கி கதிரவன் அவர்களின் ஏற்பாட்டின்படி, செல்வராஜ் தலைமையில் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தட்சிணாமூர்த்தி, ரகுராமன், முத்து, சீனுவாசன், பாலாஜி, சாய்குமார், மாரி, கலியபெருமாள், விஜய், அருட்பெருஞ்ஜோதி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வள்ளலார் அருள்வழி இராமலிங்க சுவாமிகள் அவர்களின் அருட்தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று பயனடைந்தனர்.
What's Your Reaction?






