அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான நான்காவது வட்டார அளவிலான கோ கோ விளையாட்டு போட்டி வில்லியனூர் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

Dec 9, 2022 - 04:18
Dec 9, 2022 - 04:24
 0  864

புதுவை அரசு கல்வித்துறையின் மூலம் நடத்தப்படும் நான்காவது வட்டார விளையாட்டுப் போட்டிகளை கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான கோ கோ போட்டி நடைபெற்றது. இப்போ போட்டியில் 13 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் என மொத்தம் 150 மாணவிகள் பங்கேற்றனர். போட்டியை விவேகானந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துணை முதல்வர் ரவி அவர்கள் தொடங்கி வைத்தார்.  விளையாட்டு குழு செயலாளர் மற்றும் உடற்கல்வி விரிவுரையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.

 உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் வரவேற்றார்.  விழாவிற்கான

ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் கணேஷ் பிரபு,  மகேஸ்வரி, பரமேஸ்வரி, இளவரசி, நந்தினி ஆகியோர் செய்திருந்தனர். போட்டியில் நடுவர்களாக ரகுராமன்,   ஆனந்தலிங்கம், ஏழுமலை, முருகன், அருள், பிரகாசம், வினோதினி, பாலாஜி ஆகியோர் பணியாற்றினர். 

சிறப்பு விருந்தினர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துச்செல்வன், ராஜேந்திரன், நந்தா என்ற நந்தகோபால், பெத்தி செமினார் உடற்கல்வி விரிவுரையாளர் மோட்சா இருதயராஜ், உடற்கல்வி ஆசிரியர் வரதராஜ், மங்களம் அரசு உயர்நிலைப் பள்ளியின் நுண்களை ஆசிரியர் வேலாயுதம், அருள் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் ரகு நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
RNI News Reportage News International (RNI) is India's growing news website which is an digital platform to news, ideas and content based article. Destination where you can catch latest happenings from all over the globe Enhancing the strength of journalism independent and unbiased.