அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் TTV தினகரன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கம்பன் நகர் பகுதியில் இணைச்செயலாளர் லாவண்யா ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் TTV தினகரன் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு உழவர்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பன் நகர் பகுதியில் இணைச்செயலாளர் லாவண்யா ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி வடக்கு மாநில கழக செயலாளர் S.D.சேகர் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானமும், மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சுப்ரமணியன், மகளிர் அணி செயலாளர் காமாட்சி, துணைச்செயலாளர் சிலம்பரசன், ரகுபதி, அம்மா பேரவை செயலாளர் காண்டீபன், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி, இலக்கிய அணி பாலு, முன்னாள் இலக்கிய அணி செயலாளர் ஆனந்தன், மாணவர் அணி ஜெகதீஷ், வர்த்தக அணி கணேசன், தொகுதி செயலாளர்கள் செந்தில், ரத்தினவேல், தனவேலு, தமிழ்செல்வன், ராமசந்திரன், மணவாளன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






